மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, மின் விநியோக நிறுவனங்கள் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.84,000 கோடியாக உயர்ந் துள்ளது என்று மத்திய அமைச்சர் ஆர்.கே சிங் தெரிவித்துள்ளார்.
மின் விநியோக நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரத்துக்கான தொகையை உரிய நேரத்தில் செலுத்துவதில்லை. இதனால் மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின் றன. இந்நிலையில் மின்சாரம் வாங் குவது தொடர்பாக புதிய நடை முறை கொண்டு வரப்பட்டது.
அதுகுறித்து அவர் கூறியபோது, ‘மின்சாரம் வாங்குவது தொடர்பாக நடைமுறையில் இருக்கும் போஸ்ட் பெய்ட் திட்டத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. மாறாக பணத்தை திருப்பி செலுத் துவதற்கான ஒப்பந்தத்தை கட்டா யமாக்கி உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
கால அவகாசம் முடிந்தும் செலுத்தப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகை ரூ.65,000 கோடி யாக உயர்ந்து இருப்பதாகவும், இப்பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மின் விநியோக நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்துக்கான தொகையை செலுத்த 60 நாட்கள் வரை கால அவகாசம் அளிக்கப் படுகிறது. அதன்பிறகும் விநியோக நிறுவனங்கள் உரிய கடனை செலுத்த தவறுகின்றன. இவ்வாறு காலக் கெடுமுடிந்தும் செலுத்தப் படாத தொகைக்கு வட்டி விதிக்கப் படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.65,000 கோடியாக உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து அவர் கூறிய போது, ‘விநியோக நிறுவனங்கள் காலம் தாழ்த்தாமல், வாங்கிய மின் சாரத்துக்கான தொகையை செலுத்த வேண்டும். அந்த தொகை மூலமே மின் தயாரிப்பு நிறுவனங் கள், மின்சார தயாரிப்புக்கு தேவை யான நிலக்கரி போன்ற மூலப் பொருட்களை வாங்குகின்றன.
இந்நிலையில் நிலுவைத் தொகை தாமதிக்கப்படும்பட்சத் தில், அவை மின் தயாரிப்பு நிறு வனங்களின் செயல்பாட்டை பாதிக் கும்’ என்றார். மின் தயாரிப்பு நிறு வனங்களுக்கு உத்திரவாதம் அளிக் கும் பொருட்டு, மின் விநியோக நிறுவனங்கள் இனி மின்சாரம் வாங்கும்போது உறுதிப் பத்திரம் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடை முறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.