வணிகம்

பெண் தொழில் முனைவோர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை

செய்திப்பிரிவு

இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அதிக எண்ணிக்கையில் பெண் தொழில் முனைவோர்களை கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது. தமிழ் நாட்டுக்கு அடுத்தபடியாக, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங் களில் பெண் தொழில் முனைவோர் கள் அதிகம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் 80 சதவீத பெண்கள், அரசு உதவி திட்டங்களைப் பெரிய அளவில் பயன்படுத்தாமல், தங்கள் சொந்த முதலீட்டிலேயே தொழில் செய்து வருவதாக குறிப்பிடப் பட்டு உள்ளது. பெண் தொழில் முனைவோர்களைமையப்படுத்தி செயல்பட்டுவரும் ‘ஷீஅட்வொர்க் இணையதளம்’ மேற்கொண்ட ஆய் வின் அடிப்படையில் இத்தகவல் கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

பெண் தொழில் முனை வோர்களுக்கு அதிக நலத் திட்டங் களை வழங்குவதில் கோவா, ஜம்மூ, காஷ்மீர், கர்நாடகா, ராஜஸ் தான், மேற்கு வங்காளம் ஆகியவை முன்னிலையில் இருக்கின்றன.

இதுகுறித்து அந்த இணைய தளத்தின் நிறுவனர் ரூபி சின்ஹா கூறியபோது, ‘மத்திய, மாநில அரசுகள் பெண் தொழில் முனை வோர்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஆனால் அது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

பிற துறைகளைக் காட்டிலும், கல்வித் துறையில் அதிக பெண் தொழில் முனைவோர்கள் இருக் கின்றனர். அதைத் தொடர்ந்து நிதி சேவை, காப்பீடு போன்ற துறைகளில் அவர்களின் எண் ணிக்கை அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT