நடப்பாண்டில் முக்கிய குறியீ டான சென்செக்ஸை விட மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் அதிகம் உயர்ந்திருக் கின்றன. நடப்பாண்டில் மிட்கேப் குறியீடு (பிஎஸ்இ) 13 சதவீதம் அல்லது 1,319 புள்ளிகள் உயர்ந்தன. தற்போது 11,453 புள்ளியில் இருக்கிறது.
அதேபோல ஸ்மால்கேப் குறியீடு (பிஎஸ்இ) 5.47 சதவீதம் அல்லது 610 புள்ளிகள் உயர்ந்து 11,766 புள்ளிகளாக உள்ளது. மாறாக முக்கிய குறியீடான சென்செக்ஸ் 2 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. நடப்பாண்டில் 567 புள்ளிகள் உயர்ந்த் 28,067 புள்ளியில் உள்ளது. நடப்பாண்டில் மார்ச் 4-ம் தேதி அதிகபட்சமாக 30,024 புள்ளியை சென்செக்ஸ் தொட்டது.
மிட்கேப் குறியீடு ஆகஸ்ட் 10-ம் தேதி புதிய உச்சமான 11,666 புள்ளிகளை தொட்டது. அதேபோல கடந்த 5-ம் தேதி ஸ்மால்கேப் குறியீடு 12,203 என்ற புதிய உச்சத்தை தொட் டது.