புதுடெல்லி
இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை அடைய வேண்டுமென் றால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதன் நாமினல் ஜிடிபி வளர்ச்சி 12.4 சதவீதமாக இருக்க வேண் டும் என்றும் நிதி ஆயோக் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இது 2018-19-ம் ஆண்டுக் கான பொருளாதார ஆய்வறிக்கை யில் குறிப்பிடப்பட்ட அளவை விட 0.4 சதவீதம் அதிகம் ஆகும்.
2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லி யன் டாலர் பொருளாதாரத்தை அடைவதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. அந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டே நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உருவாக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி வித்து இருந்தார். ஆனால் இந்தியா வின் தற்போதைய பொருளாதார நிலையில் அதன் நாமினல் ஜிடிபி வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 12.4 சதவீதமாக இருந்தால் மட்டுமே, மத்திய அரசின் இலக்கு சாத்தியப் படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் பகுதியில் நாமினல் ஜிடிபி 8 சதவீத மாக உள்ளது. இது கடந்த 17 ஆண்டு களில் இல்லாத அளவு மிகக் குறை வான வளர்ச்சி ஆகும். நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அள வில் 5 சதவீதமாக குறைந்து உள்ளது. இரண்டாம் காலாண்டு வளர்ச்சி விவரம் இந்த மாதம் இறுதி யில் வெளிவரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. அதன் வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாகவே இருக் கும் என்று ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலை யில் ஒட்டுமொத்த அளவில் நடப்பு ஆண்டு முழுமைக்குமாக இந்தியா வின் வளர்ச்சி 6 சதவீதமாக குறையக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை ரூ.70-ஆக எடுத்துக் கொண்டே நிதி ஆயோக் வெளி யிட்டு இருக்கும் தற்போதைய அறிக்கை உருவாக்கப்பட்டு இருக் கிறது. ஆனால் 2025-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.75-ஆக உயரக்கூடும். எனில் அதற்கு நிகரான வளர்ச்சியை எட்டி னால் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடை வது சாத்தியம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தியா மிக மோச மான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மக்களின் நுகர்வு குறைந்து இருப்பதால், நிறுவனங்களின் உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இந் நிலையில் இந்தியா அதன் வளர்ச்சியை மீட்டெடுக்க நிதி ஆயோக் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. வளச்சியை அதிக்கரிக்க வேண்டுமென்றால் முதலீடுகளை பெருக்குவது அவசி யம். அதற்கேற்ற வகையில் தொழில் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட வேண்டும் என்று தெரி வித்துள்ளது. அதேபோல் ரயில்வே துறையில் முதலீடுகள் குறைவாக உள்ளது. மட்டுமல்லாமல் பயணக் கட்டணமும் மிகக் குறைவாக உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்று கூறி உள்ளது.
ஏற்றுமதி தொடர்பாக குறிப்பிட்ட துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நவீன தொழில் நுட்பம் சார்ந்த உயர்தர பொருட் களை ஏற்றுமதி செய்ய வேண்டும். தற்போது இந்தியா, குறைந்த மதிப்பிலான செல்போன்களை மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. பதிலாக உயர் தரத்தி லான ஏற்றுமதியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்க வேண்டும் என்று கூறியுள்ளது. உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்துதல், நிலம் கையகப்படுத்துவது தொடர்ப் பாக நடைமுறையில் இருக்கும் சிக்கல்களை சரி செய்தல் போன்ற நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.