வணிகம்

தன்னலமற்ற சமூக செயல்பாட்டுக்காக அஸிம் பிரேம்ஜிக்கு விருது

செய்திப்பிரிவு

சென்னை

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜிக்கு எம்எம்ஏ அமால்கமேஷன்ஸ் குழுமம் இணைந்து 2019-ம் ஆண்டுக்கான தொழில் தலைமைத்துவ விருதை வழங்கி உள்ளது. அஸிம் பிரேம்ஜி யின் தொழில் மற்றும் சமூக பங் களிப்பை போற்றும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

விருதை ஏற்று அவர் பேசிய போது, ‘காந்தியை என் னுடைய முன்னோடியாக கொண் டுள்ளேன். எதற்கும் சமரசம் செய்துகொள்ளாமல், நேர்மையின் வழியில் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்துகளை என்னுடைய தாய் மற்றும் காந்தியிடமிருந்தே பெற்றுக்கொண்டேன். வசதி படைத்தவர்கள் தங்கள் சொத்தில் குறிப்பிட்ட பகுதியை சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடுவது அவசியம்’ என்று தெரிவித் தார்.

அமால்கமேஷன்ஸ் குழுமத் தின் நிறுவனர் அனந்தராமகிருஷ் ணன் நினைவாக 1969-ம் ஆண்டு இந்த விருது தொடங்கப்பட்டது. முதல் விருதாக ஜே.ஆர்.டி டாடா வுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில கால இடைவெளி களில் தொழில் துறையில் சாதனை நிகழ்த்துவது மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியிலும் பங்களிப்பை செலுத்தி வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் 19-வது விருது அஸிம் பிரேம்ஜிக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி இந்த விருதை வழங்கினார்.

அஸிம் பிரேம்ஜி தன் அப் பழுக்கற்ற நேர்மை மற்றும் எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத பண்பை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய அளவில் கவனிக்கத்தக்க பெரும் தொழில் நிறுவனத்தை உருவாக்கி உள் ளார். அவரது தன்னலமற்ற சமூக செயல்பாட்டுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரி விக்கப்பட்டது.

எம்எம்ஏ நிறுவனத்தின் தலைவர் ஏ.வெங்கடரமணி, டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட் லிமிடெட்டின் தலைவர் மல்லிகா னிவாசன், ஐசிஐசிஐ வங்கி யின் முன்னாள் தலைவர் என். வாகுல், கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விக்ரம் எஸ்.கிர்லோஸ்கர், முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் எம்.எம். முருகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

SCROLL FOR NEXT