வணிகம்

உளுந்து கிலோ ரூ.100-ஐ தாண்டியது

செய்திப்பிரிவு

வடமாவட்டங்களில் பரவலாக பெய்துவரும் கனமழையின் காரணமாக உளுந்து விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விளைவாக அதன் விலை உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஒரு கிலோ உளுந்தின் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்திய அளவில் அதிகம் உளுந்தம் பருப்பை உற்பத்தி செய்கின்றன.

சமீபத்தில் அம்மாநிலங்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டன. அதனால் உளுந்து சாகுபடி நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவில் அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு உற்பத்தி செய்த அளவை விட இந்த ஆண்டு 30 முதல் 40 சதவீதம் வரை குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் சென்ற மாதம் ரூ.97-ஆக இருந்த ஒரு கிலோ உளுந்தின் விலை இந்த மாதம் ரூ.125-ஆக உயர்ந்துள்ளது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைமும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்தில் வர்த்தகமாகி புதிய உச்சங்களை அடைந்தன. நேற்றைய வர்த்தகம் தொடங் கியதிலிருந்தே ஏற்றத்தில் வர்த்தகமான சென்செக்ஸ், 300 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.

இதன் மூலம் 40,790 புள்ளிகள் என்ற முந்தைய அதிக உச்சத்தை முறியடித்து 40,816 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 12,027 புள்ளிகளை தொட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 40,651 புள்ளிகளிலும் 11,999 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

SCROLL FOR NEXT