வணிகம்

ஆக. 24-ல் ஐஓசி பங்கு விலக்கல்

செய்திப்பிரிவு

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்கு விலக்கல் திங்கள் (ஆக.24) அன்று நடக்க இருக்கிறது. ஓஎப்எஸ் முறையில் நடக்கும் இந்த பங்கு விலக்கல் மூலம் 9,500 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

எந்த விலைக்கு விலக்கிக் கொள்ளப்படும் என்பதை இன்று அறிவிக்க இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் நடத்தப்படும் நான்காவது பங்குவிலக்கல் இதுவாகும். இதுவரையிலான மூன்று பங்கு விலக்கல்களில் ரூ3,000 கோடி அளவுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 69,500 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது ஐஓசி பங்கில் 68.97 சதவித பங்குகள் மத்திய அரசு வசம் உள்ளன.

5.4 கோடி டன் சுத்திகரிப்பு திறன் கொண்டது. இந்த நிறுவனத் துக்கு 24,405 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையே 53,419 தான்.

10 சதவீதம் என்பது 24.27 பங்குகள் ஆகும். நேற்றைய வர்த்தகத்தில் 0.72 சதவீதம் சரிந்து 394.85 ரூபாயில் வர்த்தகமானது. இதே விலை அளவில் விலக்கிகொள்ளும் போது ரூ.9,500 கோடி திரட்ட முடியும்.

பங்குச்சந்தையில் ஏற்ற இறக்க சூழ்நிலை நிலவுவதால் இதுவரை 3,000 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி., என்.எம்.டி.சி. நால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக்கொள்ளப்பட இருக்கின்றன.

SCROLL FOR NEXT