வணிகம்

ஏர்டெல், வோடபோன் ஐடியா-வை அடுத்து கட்டணங்களை உயர்த்துகிறது ரிலையன்ஸ் ஜியோ

பிடிஐ

முகேஷ் அம்பானியின் ரிலியன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை வரும் வாரங்களில் உயர்த்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ரிலையன்ஸ் ஜியோவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘தரவு நுகர்வும், வாடிக்கையாளர்களையும் பாதிக்காத வண்ணம் கட்டணம் உயர்த்தப்படும்’ என்று ஜியோ தெரிவித்துள்ளது.

பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. இரு நிறுவனங்களும் செப்டம்பர் 2019-ல் முடிந்த காலாண்டில் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தது.

இரு நிறுவனங்களின் இணைந்த நஷ்டம் ரூ.74,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT