புதுடெல்லி
தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில் அரசு உடனே இறங்காது. அதுதொடர்பாக நிறுவ னங்கள் எதிர்கொண்டுள்ள பிரச் சினைகளைத் தீர்க்க செயலாளர்கள் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அலைக்கற்றைக்கான நிலு வைத் தொகைகளை மூன்று மாதங் களுக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. விளைவாக தொலை தொடர்பு நிறுவனங்கள் இரண்டாம் காலாண்டில் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. வோடஃபோன் நிறுவனம் ரூ.50,921 கோடி அளவிலும், ஏர்டெல் நிறு வனம் ரூ.23,000 கோடி அளவிலும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. உடனடியாக நிலுவைத் தொகை வழங்குவது மிகச் சிக்கலானது; இது தொடர்பாக அரசு சலுகை வழங்க வேண்டும் என்று அந்நிறு வனங்கள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், நிறுவனங்களின் சிக்கல்களை தீர்க்கும் பொருட்டு செயலாளர்கள் குழு அமைக்கப் பட்டு இருப்பதாக அவர் தெரிவித் தார்.
மேலும், வங்கிகளின் வைப்புத் தொகைக்கான காப்பீட்டு தொகையை உயர்த்த சட்டம் இயற்ற இருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போது வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச காப்பீடு ரூ.1 லட்சமாக உள்ளது. அதை உயர்த்துவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும், வரவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வருவாய் குறைந்த துள்ளதால் நிதிப் பற்றாக் குறை அளவு அதிகரிக்கும்; விளை வாக நலத்திட்டங்களுக்கான செல வினங்களை அரசு குறைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியபோது, நலத்திட்டங்களுக்கான செலவினங் கள் குறைக்கப்படாது என்று உறுதி அளித்தார். பட்ஜெட்டில் நலத்திட் டங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகையை செலவிட வேண்டும் என்று மத்திய அமைச்சகத்தின் அனைத்து துறைகளையும் கேட்டுக் கொண்டதாக கூறினார். தவிர, நவம்பர் மாதத்தில் வரி வருவாய் உயரும் என்றும் தெரிவித்தார்.
நிதிப் பற்றாக்குறை விகிதத்தை கட்டுக்குள்வைக்க, பொதுத் துறை நிறுவனங்களில் அரசு வைத்திருக்கும் பங்குகளை விற்க திட்டமிடப்பட்டு இருந்தது. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ.1.05 டிரில்லியன் அளவில் பங்கு விலக்கல் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது குறித்து அவர் கூறியபோது, பங்கு விலக்கல் நடவடிக்கை துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 2025-க்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்றும் அதற்கான முயற்சியில் அரசு இறங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.