வணிகம்

ஹாங்காங்கில் பங்கு வெளியீடு: உறுதி செய்தது அலிபாபா 

செய்திப்பிரிவு

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டமுடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவாக்கி வரும் சீனாவின் அலிபாபா ஏற்கெனவே பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். நியூயார்க் உட்பட பல நாடுகளிலும் உள்ள பங்குச்சந்தைகளில் அலிபாபா தனது பங்குகளை கொண்டுள்ளது.

ஹாங்காங் பங்குச்சந்தையிலும் அலிபாபா நிறுவனம் ஐபிஓ வெளியிட்டுள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட அலிபாபா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை அலிபாபா நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பங்கு வெளியீடு ஹாங்காங்கில் 9 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. சுமார் 50 கோடி பங்குகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங் டாலர் மதிப்பில் 188 என்ற அளவில் ஒரு பங்கின் விலை இருக்கும். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என அலிபாபா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஏஐஏ இன்சூரன்ஸ் நிறுவனம் திரட்டிய 20 பில்லியன் டாலர்களுக்கு பிறகு அலிபாபாவின் நிதி திரட்டல் பெரியத் தொகையாக இருக்கும் என கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT