ஆகஸ்டு மாதத்துக்கான நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே எதிர்பார்த்தபடி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
இதில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வழங்கும் ரெபோ வட்டி விகிதம் அதே 7.25%-ல் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரொக்கக் கையிருப்பு விகிதம் சி.ஆர்.ஆர். அதே 4% தொடர்கிறது.
2015-16-ல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6% ஆக இருக்கும் என ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் உணவு பணவீக்கம், எரிவாயு பணவீக்கத்தை தவிர்த்து பொதுவாக பணவீக்கம் அதிகரித்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டியது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.