விமான பராமரிப்பு துறையில் உள்ள டெகோர் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.
சமீபத்தில் தென்னிந்திய அளவிலான விமான பயண சேவையை தொடங்கியுள்ள ஏர் பிகாசஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர்.
விமான சேவைத்துறையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி யுள்ளார். விமான நிலையம் சார்ந்த சேவைத் துறையில் கடந்த 10 ஆண்டு களாக ஈடுபட்டுள்ளார்.
சார்ட்டர்டு ஏவியேசன், ஆந்திரா ஸ்பாட், டிரையாங்கிள் ஆசியா, ருக்மணி ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்திய விமான நிலையம் சார்ந்த சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பில் செயலராகவும் பணியாற்றி வருகிறார்.
இளநிலை வணிகவியல் பட்டம் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் தகுதி பெற்றவர்.
இந்தியாவின் 11 முன்னணி விமான நிலையங்களில் பராமரிப்பு மற்றும் நிலைய சேவைகளை வழங்கி வருகிறார். இவரது நிறுவனத்தில் 4,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.