புதுடெல்லி
டிஜிட்டல் பண பரிவர்த்தனை உட்பட பணப் பரிமாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் பாதுகாப்பை வழங்கும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
வங்கி சாரா நிதி அமைப்புகள் வழியே மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை செயல்பாடுகள் உலகளாவிய அளவில் மேம்பட்டு வருகின்றன. அந்த வகையில் முன் னேறிய நாடுகள் தவிர்த்து, பாது காப்பு அம்சங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, பெரு, கொலம்பியா, மெக்ஸிக்கோ, உருகுவே ஆகிய நாடுகள் இடம்பெற்று இருப்பதாக லண்டனை தலைமையிடமாகக் கொண்ட தி எக்கனாமிஸ்ட் இன்ட லிஜென்ஸ் யுனிட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. பணப் பரிமாற் றம் தொடர் பான செயல்பாடு கள் இந்நாடுகளில் ஆரோக்கிய மான நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய அளவில் நிதிப் புழக்கம் தொடர்பான செயல்பாடு கள் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. நான்கு அளவுகோல் களை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வறிக்கை உருவாக்கப் பட்டு இருக்கிறது. வங்கி சாரா நிதி அமைப்புகள் இணைய வழி பரிவர்த்தனை சேவை வழங்க அனு மதிக்கப்பட்டு இருப்பது, போதிய அளவில் நிதிச் சேவை முகவர்கள் இருப்பது, வாடிக்கையாளர்கள் பற்றிய தெளிவான விவரங்கள், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு ஆகிய அளவுகோல்கள் அடிப் படையில் அந்த ஆய்வறிக்கை உரு வாக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி, வளர்ந்த நாடுகள் தவிர்த்து, அந்த நான்கு அடிப்படை அளவு கோல்களையும் கொண்டிருக்கும் நாடுகளாக இந்தியா, கொலம்பியா, ஜமைக்கா, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளில் பாதுகாப்பான முறையில் நிதிச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக் கிறது. புதிய தொழில் நுட்பங் களின் வழியே எவ்வித குளறுபடி யும் இன்றி பரிவர்த்தனை மேற் கொள்ளும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவை டிஜிட்டல் பரி வர்த்தனையில் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வரைவு ஒன்றை உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில் நுட்பங் களின் வழியே எவ்வித குளறுபடியும் இன்றி பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.