வணிகம்

உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு குறைந்ததால் வேளாண் துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை யிலான காலகட்டத்தில் இந்திய மக்களில் 40.50 கோடி பேர் வேலை யில் இருப்பதாக இந்திய பொருளா தார கண்காணிப்பு மையமான சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில் இதே காலத்தில் 40.25 கோடி பேர்கள் வேலையில் இருந்தனர். இந்நிலையில் இந்த ஒராண்டு காலகட்டத்தில் புதிதாக 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உரு வாகி இருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் திறன் குறைந்த வேலை பிரிவுகளின்கீழ் உள்ளன.

இது குறித்து சிஎம்ஐஇ-ன் சிஇஓ மகேஷ் வியாஸ் கூறிய போது, ‘கடந்த இரு வருடங்களு டன் ஒப்பிடுகையில் இந்த ஆண் டின் எண்ணிக்கை ஆரோக்கிய மான ஒன்று. 2018 மற்றும் 2017 காலகட்டத்தில் வேலையில் இருந்த வர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட குறைவாகும்.

2016-ம் ஆண்டில் வேலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை யுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண் டில் 6 லட்சம் அளவிலும், 2018-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 55 லட்சம் அளவிலும் குறைந்துள் ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தான் வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது’ என்று அவர் தெரிவித்தார்.

வேளாண்மை தொடர்பான துறை யில் வேலை வாய்ப்புகள் அதி கரித்து இருப்பதாக அவர் குறிப்பிட் டார். பிற துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில் பலர் விவசாய வேலை களுக்கு திரும்பி உள்ளதாக அவர் தெரிவித்தார். மே முதல் ஆகஸ்ட் காலத்தில் 85 லட்சம் பேர் வேளாண் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு கணிசமான அள வில் குறைந்துள்ளாதாக அவர் தெரிவித்தார். அதேபோல் மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் 29.5 கோடி வேலைகள் திறன் குறைந்த வேலைகளாக இருப்ப தாக குறிப்பிட்டார். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 70 லட்சம் அளவில் உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT