போலி பயனாளிகள் நீக்கப்பட்ட தால் நேரடி மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மானிய விலையிலான சமையல் எரிவாயு விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார். நேரடி பயனாளிகள் திட்டம் கொண்டு வரப்பட்டதால் (டிபிடி) எவ்வளவு பேர் முக்கிய பயனாளிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேரடி மானிய திட்டம் மூலம் உள்நாட்டில் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாவு விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட (யுஎன்டிபி) கருத்தரங்கில் அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டார். இது நேரடி மானியத்திட்டம் உருவாக்கப்பட்டதால் கிடைத்த பலன் என்றார். 2014-15ம் நிதியாண்டில் 12,700 கோடியை சேமிக்க திட்டமிடப்பட்டது என்றும் இந்த ஆண்டு ரூ. 6,500 கோடி அளவுக்கு இது குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நேரடி மானிய திட்டத்தில், சேர மானிய விலையில் சமையல் எரிவாயு பெறுபவர்களிடமிருந்து ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தது. இதன் மூலம் போலி பயனாளிகளை கண்டறிந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உரிய பயனாளிகள் இந்த திட்டத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் கூறினார்.