புதுடெல்லி
ஏர் இந்தியா நிறுவனத்தை முழு வதுமாக தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
ரூ.58,000 கோடி அளவில் அந் நிறுவனத்துக்கு கடன் உள்ளது. இந்நிலையில் அதை தொடந்து நடத்த முடியாத நிலையில், மத்திய அரசு ஏர் இந்தியாவில் வைத்திருக் கும் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது.
வாங்க விருப்பமுள்ள நிறு வனங்களிடமிருந்து விண்ணப் பங்களை வரவேற்க உள்ளது.
இந்த மாதத்தின் இறுதி யில் அல்லது அடுத்த மாதத் தில் இது தொடர்பான நடவடிக் கைகள் மேற் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே ஏர் இந்தியா பங்குகளை வாங்கு வதற்காக சில நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.