கீதா கோபிநாத் 
வணிகம்

நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் இந்தியா வளர்ந்து வரும் நாடாக திகழும்: சர்வதேச செலாவணி நிதியம் தகவல்

செய்திப்பிரிவு

நியூயார்க்

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 6.1 சதவீதமாக குறையும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. இருந்தபோதி லும் இந்தியா தொடந்து வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒன்றாக திக ழும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

2019-2020 நிதி ஆண்டில் இந்தி யாவின் வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜூலை மாதம் ஐஎம்எஃப் கணித்து இருந் தது. இந்நிலையில் தற்போது அதை 6.1 சதவீதமாக குறைத்துள் ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி யும் 3 சதவீத அளவிலேயே இருக்கும். அந்தப் பின்புலத்தின் அடிப் படையில் பார்க்கையில், இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

வாகனத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு, வங்கி சாரா நிறுவனங்களிடம் போதிய பணப்புழக்கமின்மை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சரிந்து உள்ளது. தற் போது இந்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார மீட்பு நடவ டிக்கைகளின் விளைவாகவே அந்த வளர்ச்சி அமையும் என்று ஐஎம்எஃப்-ன் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறினார்.

இந்நிலையில் இந்தியா சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் வறுமை ஒழிப்பை மேற்கொண்டு உள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியா மேலும் இதுபோலான குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்க வேண் டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண் டும். தற்போதைய நிலையில் 23 கோடி மக்களுக்கு போதிய மின் சார வசதி கிடைப்பதில்லை.ஒவ் வொரு ஆண்டும் புதிதாக 1.3 கோடி இளைஞர்கள் வேலைக்கு செல் லும் வயதை அடைகின்றனர்.

அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவது இந்தியாவின் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அதேபோல் பாலின பாகுபாட்டையும் அது சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.

SCROLL FOR NEXT