புதுடெல்லி
விமான எரிபொருள் (ஏடிஎப்) மற் றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வற்றையாவது ஜிஎஸ்டி வரம்புக் குள் கட்டாயம் கொண்டு வர வேண் டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பன்முக வரிகள் விதிக்கப்படுவ தால் இவ்விரண்டின் விலை அதிகமாகிறது. இதனால் இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் சந் தையில் ஆரோக்கியமான சூழல் நிலவவில்லை.
மாறாக இவை இரண்டையும் ஒரு முக வரி விதிப் பான ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரு வதன் மூலம் இவை இரண்டின் விலை கட்டுக்குள் வரும். இத் தொழிலும் சிறக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எனப்படும் ஒருமுனை வரி விதிப்பு நாடு முழுவதும் அம லுக்கு வந்தது. ஆனால் இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரி பொருள் (ஏடிஎப்) ஆகியவற்றுக்கு மட்டும் முந்தைய வரி விதிப்பு நிலையே தொடர்கிறது.
இரண்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி முறை மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. பெட் ரோலிய பொருள்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட தர்மேந்திர பிரதான், தற்போது குறைந்தபட்சம் ஏடிஎப் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை யாவது சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வராததற்கு முக்கிய காரணமே, இதனால் மாநிலங்களின் வரி வருவாய் பாதிப்புக்குள்ளாகும் என்பதுதான் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.