வணிகம்

அடுத்த 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்: நாடு முழுவதும் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த 25 நாட்​களில் நாடு முழு​வதும் 52 லட்​சம் திருமணங்கள் நடை​பெற உள்​ளன. இதன்​மூலம் ரூ.7.5 லட்​சம் கோடிக்கு வர்த்தகம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

திருமண சீசன் தொடர்​பாக நாடு முழு​வதும் 25 மாநிலங்​களில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆய்வு நடத்தியது. சுமார் 550-க்​கும் மேற்​பட்ட வணிகர் சங்​கங்​கள் ஒன்றிணைந்து ஆய்வை நடத்​தின. ஆய்​வின் அடிப்​படை​யில் சிஏஐடி வெளி​யிட்ட அறிக்​கை​: கடந்த 2025-ம் ஆண்டு திரு​மண சீசனின்​போது நாடு முழு​வதும் 46 லட்​சம் திரு​மணங்​கள் நடைபெற்​றன. இதன்​மூலம் ரூ.6.5 லட்​சம் கோடி வர்த்​தகம் நடைபெற்​றது.

நடப்​பாண்டு நவம்​பர் 21 முதல் டிசம்​பர் 15 வரை நாடு முழு​வதும் 52 லட்​சம் திரு​மணங்​கள் நடை​பெற உள்​ளன. இதன்​மூலம் அடுத்த 25 நாட்​களில் ரூ.7.5 லட்​சம் கோடிக்கு வர்த்​தகம் நடை​பெறும்.

தலைநகர் டெல்லி மற்​றும் அதன் சுற்​று​வட்​டார பகுதி​களில் மட்டும் 5 லட்​சம் திரு​மணங்​கள் நடை​பெற இருக்​கின்​றன. இதன்மூலம் டெல்​லி​யில் ரூ.2.5 லட்​சம் கோடிக்கு வணிகம் நடை​பெறும்.

திரு​மணங்​களால் அனைத்து வியாபாரங்​களும் வளர்ச்சி அடையும். குறிப்​பாக நகை, ஜவுளி, மளிகை, மின்​னணு பொருட்கள் விற்​பனையகங்​கள், ஓட்​டல்​கள், சமையல் கலைஞர்கள், போக்​கு​வரத்து, அழகு கலை நிபுணர்​கள், புகைப்பட, வீடியோ கலைஞர்​கள், நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் என பல்​வேறு துறைகளின் வணிகம் கணிச​மாக அதி​கரிக்​கும்.

ரூ.1.2 லட்​சம் கோடி நகைகள்...

திரு​மண சீசனின்​போது தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் சுமார் ரூ.1.2 லட்​சம் கோடிக்கு விற்​பனையாகும். சேலைகள், ஆயத்த ஆடைகள் சுமார் ரூ.90,000 கோடிக்கு விற்பனையாகும். பரிசுப் பொருட்​கள், மளிகை பொருட்​களின் விற்​பனை ரூ.37,500 கோடியைத் தாண்​டும். மின்​னணு பொருட்கள், மரச் சாமான்​கள், இனிப்பு வகைகள் ரூ.30,000 கோடிக்கு விற்​பனை ஆகும். கேட்​டரிங் துறை​யில் ரூ.75,000 கோடிக்கு வியாபாரம் நடை​பெறும்.

திரு​மண மண்​டபங்​கள், ஓட்​டல்​கள் முன்​ப​திவு மூலம் ரூ.60,000 கோடி, நிகழ்ச்சி ஏற்​பாடு செய்​யும் நிறு​வனங்​களுக்கு ரூ.37,500 கோடி வரு​வாய் கிடைக்​கும். போக்​கு​வரத்து மற்​றும் இன்​னிசை உள்​ளிட்ட கேளிக்கை துறை​யில் ரூ.30,000 கோடிக்கு வர்த்​தகம் நடை​பெறும்.

புகைப்​படம், வீடியோகிராபி, அழைப்​பிதழ்​கள், ஒப்​பனை அலங்​காரம் மூலம் ரூ.22,500 கோடிக்கு வணிகம் நடை​பெறும். நாடு முழுவதும் தொழிலா​ளர்​கள், அழகு கலை நிபுணர்​கள், ஓட்டுநர்கள், வடிமைப்​பாளர்​கள் என சுமார் 1.25 கோடி பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். இவ்​வாறு சிஏஐடி அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT