புதுடெல்லி
பொதுத் துறை நிறுவனங்களான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்இஇபிசிஓ, டிஎச்டிசி ஆகியவற்றில் பங்கு விலக்கல் மேற்கொள்ளும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை செயல்பாட்டுக்கென ஆலோசகர் களை நியமிக்க அறிவிப்பு விடுத் துள்ளது. கன்டெய்னர் கார்ப்ப ரேஷன் ஆஃப் இந்தியாவில் மத்திய அரசு 54.80 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. அதில் 30 சதவீத பங்குகளை விற்பதற்கான திட்டத் துக்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
இதுதவிர என்இஇபிசிஓ, டிஎச்டிசி ஆகிய மின்சார தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான முடிவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர் பான செயல்பாட்டுக்குத் தேவை யான ஆலோசகர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிதி ஆண்டுக்குள் ரூ.1.05 லட்சம் கோடி அளவில் பங்கு விலக்கலை மேற் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. அதன் தொடர்ச்சி யாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பங்கு விலக்கல் நடவடிக்கைக் கென தகவல் மையம் அமைக்கப் பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.