வணிகம்

மக்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு இல்லை: ஹெச்டிஎஃப்சி தலைவர் வேதனை

செய்திப்பிரிவு

மும்பை

சாமானிய வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிகளை தவறாக பயன் படுத்துவது மிகப் பெரிய பாவம். கடன் தள்ளுபடி போன்றவற்றை மேற்கொள்ளும் நாம், வாடிக்கை யாளர்களின் வைப்பு நிதிகளை பாதுகாப்பதில் முறையான கவனம் செலுத்த தவறுகிறோம் என்று ஹெச்டிஎஃப்சி-யின் தலைவர் தீபக் பரேக் கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி மீது நிதி மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கி நட வடிக்கை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து அந்த வங்கியில் ஆறு மாதங்களுக்கு அதன் வாடிக் கையாளர்கள் தங்கள் வைப்பு நிதியை எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த முடிவால் அதன் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் வாடிக்கையாளர் களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவது மிகப் பெரிய பாவம். மக்கள் கடின உழைப்பினால் ஈட்டிய பணத்தை பாதுகாப்பு கருதி வங்கியில் சேமிக்கின்றனர். அந்த பாதுகாப்பை உறுதி செய்வது வங்கிகளின் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘‘வங்கி நிதி அமைப்பு தொடர்பாக இன்னும் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய தேவையுள்ளது. கடன் தள்ளுபடி போன்றவற்றை மேற் கொள்ளும் நாம் சாதாரண மக்களின் பணத்தை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். மக் களின் நம்பிக்கையைப் பெற பல ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

ஆனால் தவறான ஒரு செயலால் அந்த நம்பிக்கை ஒரே நாளில் போய் விடும். துரதிர்ஷ்டவசமாக மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையிலேயே வங்கி கள் செயல்பட்டு வருகின்றன. உண்மையும், நம்பிக்கையுமே எந்த ஒரு தொழிலுக்கும் அடிப்படை. அவற்றை தக்க வைப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி தொடர் பாக அவர் கூறியபோது, ‘நிதி கட்டமைப்பே நாட்டின் பொருளா தாரத்துக்கான அடிப்படை. அந்த வகையில் அவற்றில் முறையான சீர்சிருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.

முதலீடுகளை பெருக்க வேண்டும்

‘நிதிக் கொள்கை முடிவுகள் உரிய தருணத்தில் மேற்கொள்ளப் பட வேண்டும். தற்போதைய நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக் கான அடிப்படைத் தேவை முதலீடுகளும், எண்ணெய்யும் தான். பல்வேறு நாடுகளும் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளன.

இந்தப் போட்டிச் சூழலில் அந்நிய முதலீடுகளை கொண்டு வருவது சவாலான விஷயம். அதற்கேற்ற வகையில் தொழில் முயற்சிகளுக்கான வழிமுறை எளிமைப்படுத்த வேண்டும். அந்நிய முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்தியா புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT