வணிகம்

பிஎம்சி வங்கி விவகாரம்: தவறுகளை ஆராயும் பணியில் ஆர்பிஐ- நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் ஏற் பட்டுள்ள தவறுகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதாக மத் திய நிதித் துறை இணை அமைச் சர் அனுராக் தாகுர் கூறினார்.

வங்கியின் நிதி நிலையை தணிக்கை செய்த ஆடிட்டர்கள் மற்றும் அவர்கள் செய்த தவறு கள் குறித்தும் ஆய்வுக்குட்படுத்தப் படும் என்று தாகுர் கூறினார்.

பிஎம்சி வங்கியில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஆர்பிஐ சில கட்டுப் பாடுகளை விதித்தது. இந்த விஷயத் தில் கட்டுப்பாட்டு அமைப்பான ரிசர்வ் வங்கிக்குள்ள பொறுப்பு களையும் புறந்தள்ளிவிட முடி யாது. அதேசமயம் வங்கியின் தணிக்கையாளர்கள், இயக்குநர் கள், வங்கி அதிகாரிகள் ஆகியோ ரது செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷ யங்களாகும் என்று அவர் குறிப் பிட்டார். வங்கியில் நிகழ்ந்துள்ள தவறுகளுக்கு நீண்டகாலமாக பொறுப்பு வகிப்போரே இதற்குக் காரணமாவர். அந்த வகையில் அதற் கான காரணங்களையும் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வங்கியின் செயல்பாடுகள் தொடர்பாக ஊடகங்களில் வெளி யாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப் பவையாக உள்ளன. பிஎம்சி வங்கி யில் நிகழ்ந்துள்ள தவறுகள், வங்கித் துறைக்கு புதிய பாடத்தை கற்பித் துள்ளது. இனி இதுபோன்ற தவறு கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

நிறுவன விவகாரத் துறை இந்த பிரச்சினையை ஆராயுமா என கேட்ட தற்கு, அரசு அனைத்து விதத்திலும் இப்பிரச்சினையை அணுகி வருவதாகவும், பொதுமக்களை பாதிக்கும் விஷயத்தில் அரசு ஒருபோதும் கவனக்குறைவாக இருக்காது என்றும் கூறினார்.

கடந்த வாரம் வங்கியில் சேமிப்பு களை வைத்துள்ளவர்கள் ரூ.1,000 மட்டுமே எடுக்க முடியும் என உத்தரவிட்டது. பின்னர் இது ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்த வங்கியில் பொதுமக்களின் சேமிப்பு ரூ.11 ஆயிரம் கோடியாக உள்ளது.

வங்கி அளித்துள்ள வாராக் கடன் பிரச்சினைக்கு தேசிய சட்ட வாரிய தீர்ப்பாயம்தான் கடைசி தீர்வாக இருக்கும் என்றும் தாகுர் குறிப்பிட்டார். இதனிடையே வங்கி யும், சீரமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண் டும் என்று வலியுறுத்திய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வின் பொருளாதாரத்தை 5 டிரில் லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவதில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பிஎம்சி வங்கியின் கடந்த கால செயல்பாடுகளை கவனித் திருந்தாலே இப்பிரச்சினையை முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும் என்ற கருத்தையும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னுரிமை கடன்கள் வழங்கு வதில் கடந்த நான்கு ஆண்டுகளில் பிஎம்சி வங்கியின் செயல்பாடு கடுமையான சரிவைச் சந்தித்துள்ள தையும் அவர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். 2019-ம் ஆண்டில் வங்கி வழங்கிய முன்னுரிமைக் கடன் விகிதம் 15.06 சதவீதமாகும். இது 2015-ம் ஆண்டில் 40.21 சதவீதமாக இருந்ததையும் குறிப்பிடுகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முன்னுரிமை கடன் வழங்குவதிலிருந்து பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் போக்குக்கு வங்கி மாறியதே பிரச்சினைக்கு பிரதான காரணம் என்றும் வங்கித் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT