புதுடெல்லி
பொதுத் துறை நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொருள் சப்ளை செய்வோருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அக்டோபர் 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மொத்த முதலீடுகள் தொடர்பாக முக்கிய துறைசார் அமைச்சகங்களின் செய லர்கள் மற்றும் நிதி ஆலோசகர் களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி முதல் காலாண்டில் 5 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந் தித்துள்ள பொருளாதார தேக்க நிலையைப் போக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றும், அதில் அவை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஒப்பந்ததாரர்கள் மற்றும் சப்ளை தாரர்களுக்கு பெருமளவிலான நிலு வைத் தொகை அரசு நிறுவனங் களில் இருந்து வர வேண்டி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார சுழற்சிக்கு ஒரு இடத்திலேயே பணம் முடங்கிப் போனால் அது உரிய பலனை அளிக் காது என்பதாலேயே, பொதுத் துறை நிறுவனங்கள் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை அக்டோ பர் 15-ம் தேதிக்குள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொதுத் துறை நிறுவனங்கள் எந்தெந்த திட்டப் பணிகளுக்கு எவ்வளவு தொகையை செலவிட திட்டமிட்டு நிதி ஒதுக்கியுள்ளன என்ற விவரத் தையும் தெரிவிக்குமாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அரசு நிறுவனங்கள் சில காரணங்களுக்காக வழங்க வேண்டிய நிதியை வழங்காமலிருக் கலாம். அவ்விதம் சச்சரவுக்குரிய பிரச்சினை மற்றும் எவ்வளவு தொகை வழங்க வேண்டியுள்ளது என்ற விவரத்தையும் தெரிவிக்கு மாறு அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகஸ்ட் மாதம் வரையான காலத்தில் 34 பொதுத் துறை நிறுவனங்கள் பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.48,077 கோடியை செலவிட்டுள்ளதாக நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் இக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் ரூ.50,159 கோடியை செலவிட முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ரூ.54,700 கோடியை செலவிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மொத்தமுள்ள 242 பொதுத் துறை நிறுவனங்கள் இந்த ஆண்டு செலவிட உள்ள மொத்த முதலீட்டுத் தொகை ரூ.4 லட்சம் கோடி என்று செலவுக் கணக்குத் துறைச் செயலர் கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்தார்.