வணிகம்

பொருளாதார சரிவிலிருந்து இந்தியா விரைவில் மீளும்: டி அண்ட் பி ஆய்வறிக்கை தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியா, தற் போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீளத் தொடங் கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவன ஆய்வறிக்கை தெரி வித்துள்ளது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கை களே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமையும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

டி அண்ட் பி இந்தியா என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் உற்பத்தி படிப்படியாக உயரும். அதற் கான முன் நகர்வை வரும் பண் டிகைக்காலங்களில் காண முடியும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மக்களின் நுகர்வு, நிறுவனங் களின் உற்பத்தி என வளர்ச்சிக் கான அடிப்படை கூறுகள் அனைத் தும் குறைந்துள்ளன. இந்நிலையில் பொருளாதார சரிவிலிருந்து மீட் கும் முயற்சியாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சில நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அவற்றின் பலனாக இந்த நிதி ஆண் டின் இறுதிப் பகுதியில் இந்தியா தற்போதைய பொருளாதார சரிவிலிருந்து மீளத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT