புதுடெல்லி
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நிறுவனங்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோர் வருமான வரித்தாக்கல் செய்ய காலக்கெடு இம்மாதம் 30-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், அதை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேர்முக வரிகள் வாரியம் (சிபிடிடி) நேற்று உத்தரவிட்டுள்ளது.
புதிய காலக்கெடுவின்படி அக்டோபர் 31-ம் தேதி வரை வருமான வரியைத் தாக்குல் செய்து கொள்ளலாம்.
வருமான வரி சட்டம் 44ஏபி-ன்படி, நிறுவனங்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட பிரிவினரின் கணக்குகள் முதலில் தணிக்கை செய்யப்பபட்டு, அந்த அறிக்கை பெற்ற பின்பு அவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவுகளில் பார்ட்னர்ஷிப்பில் உள்ளவர்களும் இதில் வருகிறார்கள். இதனால் கால அவகாசம் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நாடு முழுவதிலிருந்தும் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன.
இதனைப் பரிசீலனை செய்த மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரிக் கணக்கு தாக்கல், வரித்தணிக்கை அறிக்கை ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2019 அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான முறைப்படியான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
பொதுப்பிரிவினர் வருமானவரி தாக்கல் செய்யும் கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தணிக்கை அறிக்கை தேவைப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்குதான் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
பிடிஐ