புதுடெல்லி
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தளத்தில் 2019-ம் ஆண்டில் 1.5 லட்சம் புதிய விற்பனையாளர்கள் இணைந் துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன் னிட்டு அமேசான் தனது விற்ப னையை அதிகரிக்க திட்டமிட்டுள் ளது. இதற்காக தனது விநியோக சங்கிலியைப் பலப்படுத்தியுள்ளது. சென்னையில் புதிதாக கிடங்கு ஒன்றை தொடங்கியுள்ளது. மேலும் இந்த தீபாவளி பண்டிகையின் போது 10 கோடி புதிய வாடிக்கை யாளர்களை ஈர்க்க தீவிரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமேசான் தளத்தில் மக்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலை யில் இருக்கும் வகையில் விற்பனை யாளர்களும், பொருட்களும் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்படு கின்றன.
குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோர்களின் தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள், பாரம் பரிய கலாசார பொருட்கள் போன்ற வற்றையும் வாடிக்கையாளர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் பட்டியலிடப்படுகின்றன.
பண்டிகைக் காலங்களில் விற் பனையாளர்கள் புதிய தயாரிப்பு களை அறிமுகப்படுத்துவார்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டு வார்கள். இதனால் புதிய வாடிக்கை யாளர்கள் அமேசான் சேவையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற் படும். பெருநகரங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை யும், கிராமங்களையும் சென்றடை வதில் தீவிரமாக இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.
மேலும் பணமில்லாத காரணத் தால் பண்டிகைக்கால கொண்டாட் டத்தைத் தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை. டெபிட், கிரெடிட் கார்டுகளில் இஎம்ஐ வசதியை அமே சான் வழங்குகிறது. கூடவே பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற கடன் வசதிகளையும் வழங்குகிறது.
அதுமட்டுமின்றி எஸ்பிஐ கார்டு களுக்கு 10 சதவீத உடனடி தள்ளு படி வழங்கப்படுகிறது. இன்னும் சில வங்கிகளின் கார்டுகளுக்கும் தள்ளுபடி, கேஷ்பேக் போன்ற சலுகைகள் தரப்படுகின்றன.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை செப்டம்பர் 29-ம் தேதி தொடங்குகிறது. ஆனால், அமேசான் பிரைம் சந்தா தாரர்களுக்கு 12 மணி நேரம் முன்பாகவே இந்த மெகா தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது.
குறித்த நேரத்தில் டெலிவரி, டெலிவரி செய்யப்பட்ட பொருளில் ஏதேனும் பிரச்சினை எனில் எளிதாகத் திருப்பித் தரும் வசதி, விரைவான ரீஃபண்ட் போன்ற வாடிக்கையாளர் சேவைகளையும் வழங்கி வருகிறது அமேசான்.