மும்பை
பங்குச் சந்தை வர்த்தக விதிமீற லில் ஈடுபட்டதாக அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் மீது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி ரூ.22.70 கோடி அபராதம் விதித்துள்ளது.
2008 ஜூலை முதல் 2009 மார்ச் வரையிலான காலகட்டத்தில் அர விந்தோ பார்மா பங்குச் சந்தை வர்த்தக விதிமுறைகளை மீறியுள் ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலை யில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு இருக்கிறது.
அரவிந்தோ பார்மா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைஸர் ஆகிய இரண்டு நிறுவனங்களும் விநியோகம் மற்றும் சில உரிமம் தொடர்பாக 22 ஜூலை 2008 அன்று ஒப்பந்தம் மேற்கொண்டன. அதைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 29 ஆகிய நாட்களிலும் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த புதிய ஒப்பந்தம் குறித்த தகவலை இந்த இரு நிறுவனங்களும் 3 மார்ச் 2009 அன்றே வெளியிட்டன. இந் நிலையில் 22 ஜூலை 2008 முதல் 3 மார்ச் 2009 வரை இந்த ஒப்பந் தம் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் பங்குச் சந்தை வர்த்தகத்தில் அரவிந்தோ பார்மா ஈடுபட்டுள்ளது. இது பங்குச் சந்தை விதிமுறைகளின்படி குற்றமா கும். இந்த விதிமீறலில் ஈடு பட்டதாக, அந்நிறுவனத்தின் தலைவர் ராம்பிரசாத் ரெட்டி, அவருடைய மனைவி சுனீலா ராணி, நிர்வாக இயக்குநர் கம்பன் பி ரெட்டி, அதன் குழும நிறுவனமான டிரைடண்ட் செம்பார், வெரிடாஸ் ஹெல்த்கேர், டாப் கிளாஸ் கேபிடல் மார்க்கெட் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, அரவிந்தோ பார்மாவுக்கு அப ராதம் விதித்துள்ளது.