மும்பை
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித் ததன் எதிரொலியாக அந்த வங்கி யில் பணத்தை எடுக்க ஏராள மான முதலீட்டாளர்கள் முற்றுகை யிட்டனர்.
டெபாசிட்தாரர்கள் ரூ.1,000-த் துக்கு மேல் எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு பொதுமக்களை மேலும் கலவரப்படுத்தியுள்ளது.
பிஎம்சி வங்கிக்கு 6 மாநிலங் களில் 137 கிளைகள் உள்ளன. இந்த வங்கி புதிதாக கடன் வழங் குவது, முதிர்வுத் தொகையை டெபாசிட் தாரர்களுக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. செப்டம்பர் 23-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாக ஆர்பிஐ செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்த தடை குறித்த தகவல் வெளியான உடனேயே மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள கிளைகளில் முதலீட்டாளர்கள் பெருமளவில் குவிந்தனர். தாங்கள் டெபாசிட் செய் துள்ள தொகையை எடுக்க வங்கி யின் முன் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் முன்னேற்பாடாக வங்கிக் கிளை களில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் இருந்தது.
பிஎம்சி வங்கிக்கு மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கோவா, குஜ ராத், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்த கூட்டுறவு வங்கி 1984-ல் உருவாக்கப்பட்டது. மும் பையில் சிறிய அறையில் உருவாக் கப்பட்ட வங்கி தற்போது 137 கிளைகளுடன் செயல்படுகிறது. நாட்டின் 10 பெரிய கூட்டுறவு வங்கி களில் ஒன்றாக கருதப்படுகிறது.
புதிதாக கடன் வழங்குவது, கடனை புதுப்பிப்பது மற்றும் முத லீடுகள் மேற்கொள்வது உள் ளிட்ட நடவடிக்கைகளுக்கு 6 மாதங் களுக்கு தடை விதிப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் புதிய டெபாசிட்களை ஏற்பது, புதிய கடன்களை வழங்குவது போன்ற எந்த நடவடிக்கையிலும் வங்கி ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வங்கியில் டெபாசிட் போட் டிருந்தவர்கள் அதிகபட்சம் ரூ.1,000-த்துக்கு மேல் எடுக்க முடியாது. வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் கடனை திருப்ப செலுத்த வேண்டியிருந்தால் அந்த தொகையை அவர்களது சேமிப்புக் கணக்கில் அட்ஜெஸ்ட் செய்யுமாறு அதாவது பிடித்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளது.
வங்கியில் முதலீடு செய்திருந் தவர்கள் முதிர்வு காலத்தை மேலும் புதுப்பிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட முதலீடானது சம்பந்தப் பட்ட நபரின் பெயரில் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
அதேசமயம் ஊழியர் சம்பளம், அலுவலக வாடகை, வரி, மின் கட்டணம், ஸ்டேஷனரி போன்ற பொருள்கள், சட்ட ஆலோசனை செலவு உள்ளிட்டவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு பரிந்துரைத் துள்ள குறிப்பிட்ட முதலீடுகளில் மட்டும் முதலீடு செய்ய வங்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சேமிப்புகளுக்கு ஈடாக கடன் இருப்பின் அதை சரி செய்வதற்கு சட்டத்தில் இடமிருப்பதாக பிஎம்சி வங்கி தெரிவித்துள்ளது. இதை சட்ட ரீதியாக மேற்கொள்ளுமாறு ஆர்பிஐ தெரிவித்துள்ளது.