மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி. ஆயில் இந்தியா மற்றும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் கணிசமான பங்குகளை விலக்கிகொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
`ஆபர் பார் சேல்’ முறையில் இந்நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. இதற்கான சட்ட ஆலோசகர்களை பங்குவிலக்கல் துறை நியமித்திருக்கிறது. நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் ரூ.11,500 கோடி திரட்ட முடியும்.
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 15 சதவீதம், ஆயில் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீதம், என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீதம், என்டிபிசி மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) ஆகிய நிறுவனங்களில் 5 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
என்டிபிசி மூலமாக ரூ.5,724 கோடி, ஆயில் இந்தியா மூலம் ரூ.2,723 கோடி, பிஇஎல் மூலம் ரூ.1,366 கோடி, ஹிஸ்துஸ்தான் காப்பர் மூலம் ரூ.874 கோடி, என்ஜினீயர்ஸ் இந்தியா மூலம் ரூ. 813 கோடியும் திரட்டப்பட வாய்ப்பு இருக்கிறது.
தவிர பொதுத்துறை இடிஎப்களில் சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக அதில் மாற்றம் செய்ய நிதிமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.