வணிகம்

வங்கி முறைகேடுகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு: மத்திய கண்காணிப்பு ஆணையம் திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஊழல் தடுப்பு அமைப்பான மத்திய கண்காணிப்பு ஆணையம் வங்கி முறைகேடுகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இனி வங்கிகள் பயமில்லாமல் முடிவுகளை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் நேர்மையாக முடிவு களை எடுக்க வழிவகை செய்யும் வகையில் இந்தக் குழு அமைக்கப் படும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ள்து.

முன்னாள் சிவிசி அமைப்பின் ஆணையர் டி.எம், பாசின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது. ரூ.50 கோடிக்கும் அதிகமான வங்கி முறைகேடுகளை இந்தக் குழு ஆய்வு செய்ய உள்ளது. அதன் படி வங்கிகள் எடுத்த முடிவு நிறு வனத்தின் வளர்ச்சிக்கானதா அல்லது எடுக்கப்பட்ட முடிவு வங்கி வளர்ச்சிக்கும், விதிகளுக்கும் எதிரானதா என்பதை இந்தக் குழு முடிவு செய்ய உள்ளது.

இதனால் இனி முடிவுகளை எடுக்க வங்கிகள் தயங்கத் தேவையில்லை. இதன் மூலம் கடன் கொடுப்பது ஊக்குவிக்கப்படும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT