புதுடெல்லி
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து தெளி வான வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள் ளது.
வரும் அக்டோபர் 2 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந் நிலையில் எந்தவகையான பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் ‘ஒரு முறை பயன்பாடு’ வரையறைக் குள் வரும் என்ற தெளிவான வழி காட்டுதலை அளிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர் கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு, மத் திய சூழலியல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கு அனுப்பிய கடிதத் தில் குறிப்பிட்டிருப்பதாவது: ‘சூழல் பாதுகாப்பின் பொருட்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப் பது மிக அவசியமானது.
அதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ் டிக் பொருட்களை தவிர்க்க வேண் டும் என்ற பிரதமரின் அறிவிப்பு வர வேற்கத்தக்கது. ஆனால் தற்போது எந்தவகையான பிளாஸ்டிக்கு களை பயன்படுத்தலாம் என்ற குழப் பம் நீடித்து வருகிறது.இவற்றைத் தீர்க்க தெளிவான வழிகாட்டுதல் களை வெளியிடுவது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலும் பெரு நிறுவனங்களே இவ்வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிக மாகக் கொண்டிருக்கின்றன. அவர்களிடமிருந்து வரும் தயாரிப்பு களைத்தான் சிறு வணிகர்கள் விற்று வருகின்றனர்.
வேலை இழப்பு அபாயம்
மேலும் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் இவ்வகையான பிளாஸ்டிக் தயாரிப்புகளில் ஈடு பட்டு வருகின்றன. பல லட்சம் ஊழியர்கள் அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இவ்வகையான அறிவிப்பு வெளி வரும்போது நிறுவனங்களும், வேலைவாய்ப்பும் பாதிப்படையும்.
எனவே நிறுவனங்களும், ஊழியர்களும் அரசின் இந்தப் புதிய அறிவிப்பால் எவ்வித பாதிப்பு களுக்கும் உள்ளாகாத வகையில் மாற்று முறைகளை அரசு அறி விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.