புதுடெல்லி
தற்போதையை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டுமென்றால் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே முடியும். தற்போது மத்திய அமைச் சரவையில் உள்ளவர்கள் பொருளா தாரத்தைப் பற்றி முறையான புரிதல் கள் கொண்டவர்கள் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிர மணியன் சாமி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியா எதிர் கொள்ளும் பொருளாதார சரிவு அமைப்பு ரீதியாக ஏற்பட்ட தவறுகளால் உண்டானது. என்னென்ன காரணிகள் இதற்கு காரணம் என்பது முதலில் முறையாக அடையாளம் காணப்பட வேண்டும். அவற்றை சிறந்த வகையில் தீர்க்கும் வழிகளையும் திட்டமிட வேண்டும். அதற்கேற்ற வகையில் பேரியல் பொருளியலில் நிபுணத்துவம் கொண்ட பொருளாதார நிபுணர்கள் குழு அவசியம் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு வளர்ச்சி, உற்பத்தி, ஏற்றுமதி, நுகர்வு என அனைத் தும் சரிந்துள்ளன. சமீ பத்திய அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
தேவையும், மக்களின் நுகர்வும் குறைந்துள்ள இந்த பொருளாதார நெருக்கடியில் நிலையில் பண வீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பது பெருமைகொள்ள வேண் டிய விஷயமில்லை என்று சுப்பிர மணியன் சாமி கூறியுள்ளார்.