வணிகம்

வரி குறைப்பு குறித்து ஆலோசிக்க கோவாவில் செப். 20-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இம்மாதம் 20-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார். மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

தற்போது நிலவும் பொருளாதார தேக்க நிலையால் ஆட்டோ மொபைல் துறை விற்பனை கடு மையாக சரிந்துள்ளது. விற் பனையை ஊக்குவிக்கவும், தேக்க நிலைக்குத் தீர்வு காணும் வித மாக ஆட்டோமொபைல் துறைக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந் துள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் வாகனத்துறைக்கு வரிக்குறைப்பு அளிப்பது தொடர் பாக விவாதிக்கப்பட உள்ளது. இதனால் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மாநிலங்கள் தாங்களாகவே எந்தவித வரிக் குறைப்பு நடவடிக் கையும் எடுக்க முடியாது. ஆனா லும் வரிக் குறைப்புக்கு பரிந் துரைத்தால் மாநிலங்களின் வரி வருமானமும் குறையும். அத்துடன் மத்திய அரசு வழங்குவதாக ஒப்புக் கொண்டுள்ள இழப்பீட்டு அளவும் குறையும். மத்திய அரசு 2017-ம் ஆண்டு முதல் 2019 வரையான காலத்தில் ரூ.1,98,963 கோடியை மாநில அரசுகளின் வரி வருவாய் இழப்பீட்டுக்கு ஈடாக ஒதுக்கியுள்ளது. இதுவரை ரூ.1,75,572 கோடி வழங்கப்பட் டுள்ளது. மீதம் வழங்க வேண்டிய தொகை ரூ.23,391 கோடி மட்டுமே. வரிக் குறைப்புக்கு ஒப்புக் கொண் டால் தங்களது வரி வருவாயும் குறையும். இதனால் மாநில அரசு கள் வரிக் குறைப்பு நடவடிக் கைக்கு எந்த அளவுக்கு ஒப்பு தல் அளிக்கப் போகின்றன என் பது கூட்டத்தின் முடிவில்தான் தெரியும்

          
SCROLL FOR NEXT