மும்பை
சிஜி பவர் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்த கவுதம் தாப்பரை அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கடந்த மாதம் பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில் இந்த நடவடிக்கையை எதிர்த்து கவுதம் தாப்பர் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சிஜி பவர் நிறுவனம் மின்சாரம் தொடர்பான பாகங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கவுதம் தாப்பர் இந்நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார். இந்நிறுவனத்தின் அதிகாரிகளே முறையான அனுமதி ஏதுமின்றி பணப் பரிவர்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டு வந் துள்ளனர். இந்த விவகாரம் கடந்த மாதம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29 அன்று கவுதம் தாப்பரை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.
இந்நிலையில், எதன் அடிப்படையில் பதவி நீக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஆவணங்களை தனக்கு அளிக்க வேண்டும் என்று கவுதம் தாப்பர் சட்ட ரீதியாக நிறுவனத் துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அவருடைய பதவி நீக்கத்துக்கு மறுநாள், அதாவது ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை தனக்கு அளிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீதான நிறுவனத்தின் குற்றச் சாட்டுக்கு அவர் அளித்த பதிலை நிறுவனம் முறையாக ஆவணப் படுத்தி உள்ளதா என்ற கேள்வியை யும் அதில் எழுப்பி உள்ளார்.
இது கவுதம் தாப்பர் நிறுவனத்துக்கு அனுப்பும் இரண்டாவது கடிதம் ஆகும். முதல் கடிதத்தை செப்டம்பர் 5 அன்று அனுப்பினார். நேற்று முன் தினம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். நீல்காந்த் ராஜினாமா செய்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.