புதுடெல்லி
கார் தயாரிப்பில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் கார்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் வாங்க முடியாத அளவில் கார்களின் விலை இருக்கும் என்று மாருதி சுஸூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறியுள்ளார்.
ஏற்கெனவே கார் விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இதில் பாதுகாப்பு வசதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகளால் அது மேலும் சரிவை சந்திக்கும் என்று அவர் கூறினார்.
வாகனத் தயாரிப்பில் அரசு புதியக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் விற்பனை செய்யப் படும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்6 விதிகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கார்களில் ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாது காப்பு வசதிகள் அனைத்து கார் களிலும் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிக வரியின் காரணமாக வாகனப் பயன்பாடு குறைந்து வரு கிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி பெரும் சுமையாக இருந்து வருகிறது. இது தவிர மாநில அரசுகளும் சாலை மற்றும் வாகனப் பதிவுக் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளன. இத னால் மக்கள் வாகனங்கள் வாங்கு வதை தவிர்த்து வருகின்றனர். இரு சக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்துக்கு மாற விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற அளவில் வாகனங்களின் விலை இருக்க வேண்டும். தற்போதுள்ள புதிய கட்டுப்பாடுகளால் வாகனத் தயாரிப்பு செலவு மேலும் உயர்ந்து, வாகன விலையும் அதிகரிக்கிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் எளிதாக வாங்க முடியாத அளவில் வாகன விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.
தற்காலிகமாக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டியால் (28% லிருந்து 18%), வாகன விற்பனை உயர்ந்து விடாது. தரக்கட்டுப்பாட்டு விதிகள், வாகன காப்பீட்டு தொகைகள், சாலை வரிகள் என பல்வேறு காரணிகள் வாகன விற்பனை சரிவுக்கு காரண மாக இருக்கின்றன. மட்டுமல்லாமல் வங்கிகளும் கடன் அளிப்பதில் தயக்கம் காட்டுகின்றன. இவற்றை சரி செய்ய திட்டமிட வேண்டும். வாகனத் தயாரிப்பில் பிற நாட்டு விதிமுறைகளுடன் இந்திய விதிமுறைகளை ஒப்பிடக் கூடாது. அங்கு தனி நபர் வருமானம் மிக அதிகம். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை. எனவே இங்குள்ள மக்கள் வாங்கத்தக்க விலையில்தான் வாகனங்களை தயாரிக்க முடியும்.
இந்தியாவில் உள்ள கார்களும் தேவையான பாதுகாப்பு வசதிகளுடன்தான் வருகிறது. வெளிநாடுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளை இங்கும் கொண்டு வர வேண்டுமென்றால், தயாரிப்பு செலவு கடும் அளவில் உயரும். இதனால் நடுத்தர வருமான உள்ள மக்கள் இறுதி வரை இருசக்கர வாகனங்களையே பயன்படுத்தும் சூழல் உருவாகும். ஏர் பேக், ஏபிஎஸ் போன்ற புதிய பாதுகாப்பு வசதி இல் லாத கார்களைக் காட்டிலும் இரு சக்கர வாகனம்தான் அதிக ஆபத்தா னது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடுமை யான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. வாகன விற்பனை அளவு மோசமான அளவில் சரிந் துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை நிறுத்தி விட்டனர். விளைவாக வாகனத் துறை சார்ந்த 3.5 லட்சம் பணி யாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.