சிம்லா
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர் கள் சிலர் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரு வதற்கான முயற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாள் நிறை வடைந்தது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இத் தகவலைத் தெரிவித்தார். கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும் விவகாரத்தில் அரசு அசிரத்தையாக இல்லை. இது மிகுந்த கால அவகாசம் பிடிக் கும் சட்ட ரீதியான போராட்டமாகும்.
இந்தியர்கள் விவரம்
இது தொடர்பாக அந்நாட்டு அரசுகளுடன் ஒப்பந்தம் மேற் கொள்ளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதன் பலன் விரைவில் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்காக ஏ.பி. ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது சுவிட்சர்லாந்து அரசு தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டுள்ள பணம் குறித்த விவரங்களை அளிக்கத் தொடங்கியுள்ளது. இவ்விதம் பணம் சேர்த்துள்ளவர்கள் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அச்சத்தில் உள்ளனர் என்றார்.
மதிப்பீடு செய்யும் முறை
சரியாக வருமான வரி செலுத்து வோரை இந்த அரசு மதிக்கிறது. அதேசமயம் அவர்கள் தாக்கல் செய்யும் விவரங்களை முகம் தெரியாத அதிகாரிகள் மதிப்பீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 100 நாட்களில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களிலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்று அனுராக் தாக்குர் குறிப்பிட் டார்.