வணிகம்

சொமட்டோவில் 540 ஊழியர்கள் நீக்கம்

செய்திப்பிரிவு

மும்பை

உணவு விநியோக நிறுவனமான சொமட்டோ, அதன் வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவில் பணிபுரிந்து வந்த 540 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து சொமட்டோ நிறுவனம் கூறியதாவது: ‘தற்போது எங்கள் நிறுவனம் முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வருகிறது. நவீன தொழில்நுட்பங்களால் எங்கள் விநியோக செயல்பாடுகள் அனைத் தும் மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்படு கின்றன. இதனால் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் தேவை குறைந்துள்ளது. இந்நிலை யில் இந்தப் பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

சொமட்டோ நிறுவனம் வாடிக்கையாளர் விரும்பும் உணவை அவர்கள் விரும்பும் ஹோட்டலில் இருந்து பெற்று வாடிக்கையாளர் களுக்கு நேரடியாக வழங்கும் உணவு விநியோக சேவையை செய்துவருகிறது. தற் போது அதன் அனைத்துச் செயல்பாடுகளும் தொழில்நுட்ப மயமாகிவிட்டன. இதனால் உணவை விநியோகம் செய்யவும், தேவை யான தொழில்நுட்பங்களை உருவாக்கவும் தான் பணியாளர்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவில் உள்ள 540 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

SCROLL FOR NEXT