வணிகம்

இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட வேண்டும்: சுஸுகி சிஇஓ வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

வாகன உதிரி பாக தயாரிப்பு நிறு வனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உட்பட வாகனங்களுக்கு தேவையான முக்கிய பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சி அயுக்வா வலியுறுத்தி உள்ளார்.

இதன் மூலம் வாகன உதிரி பாக இறக்குமதியை குறைக்க முடியும். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக பயனளிக்கக் கூடியதாக அமை யும் என்று அவர் கூறியுள்ளார்.

வாகன உற்பத்தி இந்தியா விலேயே மேற்கொள்ளப் பட்டாலும், சில முக்கியமான பாகங் கள் வெளிநாட்டில் இருந்து இறக்கு மதி செய்யப்படுகின்றன. இந்நிலை யில் அனைத்து பாகங்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று வாகன உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களை கெனிச்சி அயுக்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியபோது, ‘‘மாருதி சுஸூகியின் வாகனங்களே இந்தியாவில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஆகும். எங்கள் வாகனத் தயாரிப்புக் கும் சில எலக்ட்ரானிக் பாகங்களை வெளிநாட்டில் இருந்து இறக்கு மதி செய்ய வேண்டியதாக உள் ளது. முக்கிய பாகங்கள் அனைத் தும் இந்தியாவிலேயே தயாரிக்கப் பட வேண்டும். இதனால் எங்கள் நிறுவனம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவும் பயன்பெறும்.

மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். அதுவே இந்தியாவை முன்னேற் றத்தை நோக்கி அழைத்துச் செல்லக் கூடியதாக அமையும். அதேபோல் நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்களை பயன் படுத்துவதை அரசு ஆதரிக்க வேண் டும். அப்போதுதான் இலக்கை விரைவாக அடைய முடியும்’’ என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT