வணிகம்

நீரவ், மெகுல் சோக்ஸியின் நிலுவை ரூ.289 கோடி- வாராக் கடனாக அறிவித்தது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்

செய்திப்பிரிவு

மும்பை

பொதுத் துறை வங்கிகளில் ஒன் றான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியிலும் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தற்போது தெரியவந் துள்ளது. இவர்கள் இருவரையும் வில்ஃபுல் டிஃபால்டர், அதாவது பணத்தை செலுத்துவதற்குரிய நிதி நிலை இருந்தும் வேண்டுமென்றே பணத்தை செலுத்தாதவர்களாக அறிவிக்கப்பட்டு, இவர்களின் கடன்களும் வாராக் கடன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையில் ரூ.13,500 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தது கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர். இவர் களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அம லாக்கத் துறை, புலனாய்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். ஆன்டிகுவாவில் தஞ்சம் புகுந்துள்ள மெகுல் சோக்ஸியை யும் இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைய உள்ள ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியும் இவ்விருவருக்கும் கடன் வழங்கியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மும்பையில் உள்ள கஃபே பரேட் கிளையில் இந்தக் கடன் தொகை வழங்கப் பட்டுள்ளது. இவர்களிருவரும் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.289 கோடியாகும்.

நீரவ் மோடிக்குச் சொந்தமான பயர்ஸ்டார் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் பயர்ஸ்டார் டயமண்ட் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகியன முறையே ரூ.60.41 கோடி மற்றும் ரூ. 32.25 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை.

மெகுல் சோக்ஸி நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் மற்றும் நட்சத்திரா வேர்ல்டு லிமிடெட் ஆகியன முறையே ரூ.136.45 கோடி மற்றும் ரூ.59.53 கோடி நிலுவை வைத்துள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவர்களிருவரும் கடன் பெற்று நாட்டை விட்டு ஓடிய விவகாரம் வெளியான பிப்ரவரி 2018-லியே இவர்களிருவரும் பெற்ற கடன் தொகையை வாராக் கடனாக ஓபிசி அறிவித்தது. இதை 2018 மார்ச்சில் தாக்கல் செய்த வங்கியின் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சேர்த்துள் ளது. அத்துடன் மட்டுமின்றி இவர் களது சொத்துகளை பொது மக்கள் யாரும் வாங்க வேண் டாம் என்றும் அறிவுறுத்தி யது.

ஆனாலும் இந்த விவகாரம் வெளியாகி 18 மாதங்கள் கழித்து இப்போதுதான் இந்த நிலுவைத் தொகை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓபிசி இணைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்ட பிறகு இத்தகவலை வெளி யிடுவது ஏன் என்று வங்கியாளர் களே கேள்வியெழுப்பியுள்ளனர். ஓரியண்டல் வங்கி தவிர பிற வங்கிகளும் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோருக்கும் அவர்களது நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியிருக்கலாம். ஆனால் அவற்றை வங்கிகள் வெளியிடா ததற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் தற்போது எழுந்துள் ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத ஸ்டேட் வங்கி மெகுல் சோக்ஸி குடும்பத்துக்கு வழங்கிய தொகை ரூ.405 கோடி என அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT