வணிகம்

வங்கி இணைப்புக்கு பிஎன்பி ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது, பஞ்சாப் வங்கியுடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளையும் இணைப்பதற்கு பிஎன்பி-யின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கி கள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக இயக்குநர்கள் குழு கூட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி நேற்று நடத்தியுள்ளது. அந்தக் கூட்டத்தில் வங்கி இணைப் புக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகள் இணைப்பு செயல் பாட்டுக்காக பிஎன்பி வங்கிக்கு ரூ.16,000 கோடி நிதி வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவித் திருந்தது.

2-வது பெரிய வங்கி

இந்நிலையில், இந்த இணைப் புக்குப் பிறகு ரூ.18 லட்சம் கோடியை வருவாயாகக் கொண்டு பிஎன்பி நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக இருக்கும். வங்கி பங்குதாரர்களின் ஒப்புதலை பெறுவதற்காக, கூடுதல் பொதுக் கூட்டம் வரும் அக்டோபர் 22 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT