வணிகம்

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கான அடித்தளம்: நிதித் துறை செயலர் ராஜீவ் குமார் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பொதுத் துறை வங்கிகள் இணைக்கப் படும் நடவடிக்கை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான படிக்கற்கள் என்று நிதித் துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த வங்கி இணைப்பு நடவடிக்கை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு வழிவகுக்க கூடியதாக அமையும் என நிதித் துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மிகப் பெரிய அளவிலான வங்கிகள் மூலமே நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியப்படும். வளர்ச்சி நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இணைப்பு பொருளாதார வளர்ச்சி யில் சீரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது வங்கித் துறைகள் அனைத்தும் தொழில்நுட்பமயமாகி இருக்கின்றன. வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப் படுகிறது.

வங்கிகள் இணைப்புக்கான கால அவ காசம், வங்கிகளின் இயக்குநர் கள் குழுவிடம் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா இரண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் இணைக்கப்பட உள்ளன. இந்தி யன் வங்கி, அலகாபாத் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது. கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. யூனி யன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மூன்றும் ஒரே வங்கியாக மாற்றப்பட உள்ளன.

SCROLL FOR NEXT