புதுடெல்லி
அந்நிய நேரடி முதலீட்டை அதி கரிக்க சிங்கிள் பிராண்ட் விற்பனை பிரிவில் உள்ள கெடுபிடிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜனவரி 2018-ல் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை 100 சத வீதம் அனுமதிக்கும் முடிவை அரசு அறிவித்தது. ஆனாலும், அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகள் அந்நிய நேரடி முதலீடுகள் செய்வதற்கு தடையாகக் கருதப்பட்டன.
இதனால் ஏப்ரல் முதல் செப் டம்பர் வரையிலான காலகட்டத் தில் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 11 சத வீதம் சரிந்தது. மேலும் தற் போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பதால், சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தொழில் துறையை ஊக்குவிக்க வும், முதலீடுகளை அதிகரிக்க வும் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வேண்டி சிங்கிள் பிராண்ட் விற்பனை பிரிவில் உள்நாட்டில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், விற்பனை தளங்களை அமைப்ப தற்கு முன்பு ஆன்லைன் விற்பனை செய்ய அனுமதி மறுக்கப் பட்டுவந்ததையும் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி விற் பனை தளங்களை அமைக்கா விட்டாலும் ஆன்லைன் விற் பனையை அனுமதிக்க தயாராகியுள்ளது.
கடந்த பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிங்கிள் பிராண்ட் விற்பனையில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்