வணிகம்

ஜனரஞ்சக பொருளாதார கொள்கை இனி வேண்டாம்: நாராயணமூர்த்தி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோரக்பூர்

வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த தொழில்முனைவோரின் முன்புள்ள தடைகளை அகற்ற வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

கோரக்பூரில் உள்ள மதன்மோகன் மாளவியா பல்லைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி பேசினார். அவர் பேசியதாவது:

கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவில் தற்போது பொருளாதார சூழல் ஆதரவாக உள்ளது. கடுமையான உழைப்பும், தொடர்ச்சியான முயற்சிகளும் நமது பொருளாதாரத்தை மேலும் உயர்த்தும். பொருளாதார அடிப்படையில் இந்தியா அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கும். எனினும் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

குடிமக்களுடன் மேலும் நட்பு சார்ந்ததாக நமது அரசு இருக்க வேண்டும். தொழில்முனைவோருக்கு முன்புள்ள தடைகளை அகற்ற வேண்டும், இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். நமது பொருளாதார கொள்கைகள் ஜனரஞ்சகமாக இருப்பதைவிடவும், நிபுணத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT