வணிகம்

உணவுச் சந்தையில் நுகர்வோரின் நம்பிக்கையைப் பெறுவதே சவால்: நெஸ்லே இந்தியப் பிரிவின் தலைவர் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை

சர்வதேச அளவில் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமாக இருக் கும் நெஸ்லே தனது பிரபல ஹெல்த் டிரிங்க் பிராண்டான ‘மைலோ’வை இந்தியாவில் தீவிரமாகச் சந்தைப் படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர் கள் சந்திப்பில் நெஸ்லே நிறுவனத் தின் தலைவர் சுரேஷ் நாராயணன் கூறியதாவது: “இந்தியாவில் நெஸ்லே பல்வேறு வகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்துவருகிறது. அவற்றில் பல சந்தையில் முன்னணி இடத்தில் இருக்கின்றன. தற்போது எங் களின் ஹெல்த் ட்ரிங்க் பிராண் டான ‘மைலோ’வை இந்தியச் சந்தைகளில் தீவிரமாகச் சந்தைப் படுத்த திட்டமிட்டுள்ளோம்.

சிங்கப்பூரில் தயார் செய்யப் பட்டாலும், இந்தியர்களின் சுவை மற்றும் தேவைக்கு ஏற்ப ‘மைலோ’ பானம் உருவாக்கப் பட்டுள்ளது. மைலோவில் முக்கிய விட்டமின்கள், மினரல்கள் சேர்க்கப் பட்டு குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த உற்சாக பானமாக உருவாக்கப் பட்டுள்ளது.

அவர் மேலும் கூறும்போது, “சந்தை மந்த நிலையில் இருந் தாலும் உணவுப் பொருட்கள் என் பது அத்தியாவசியமாக இருப்ப தால் பெரிய அளவில் வீழ்ச்சி இருக்காது என்றே நம்புகிறோம். மேலும் உற்சாக பானங்களில் ஏற் கெனவே சந்தையில் பிரபல பிராண் டுகள் இருக்கும் நிலையில் போட் டியைச் சமாளிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் உணர்கிறோம்.

ஆனால், உணவுச் சந்தையைப் பொருத்தவரை நுகர்வோரின் நம் பிக்கையைப் பெறுவதுதான் சவால். அந்த நம்பிக்கையை நெஸ்லே பெற்றிருக்கிறது. இல்லை யென்றால் மேகி பிரச்சினையி லிருந்து மீண்டு வந்திருக்க முடி யாது.” என்றார்.

SCROLL FOR NEXT