வணிகம்

கடன் வாங்குபவர்களைக் கண்காணிக்க நவீன தகவல் மையத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்: தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து

செய்திப்பிரிவு

மும்பை

பொதுத் துறை வங்கிகள், கடன் வாங்குபவர்கள் பற்றிய தகவல் களை ஒன்றுதிரட்டி வைப்பதற்காக, தனித்து இயங்கக் கூடிய வகை யிலான தகவல் தொழில் நுட்பக் கட்டமைப்பை உருவாக்க வேண் டும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே. சுப்ரமணியன் கூறியுள்ளார். அதன் மூலம், வங்கி களில் கடன் பெற்று நிதி மோசடி யில் ஈடுபடுபவர்களின் எண்ணிக் கையை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஜிஎஸ்டிக்கு என்று தனியாக தகவல் தொழில் நுட்பக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் வரி செலுத் துபவர்கள் தொடர்பான அனைத்து கணக்கு வழக்குகளும் சேகரிக்கப் படுகின்றன. இதனால் ஜிஎஸ்டி தொடர்பாக மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தடுக்கப்படுகின் றன. அதுபோலவே, பொதுத் துறை வங்கிகளும் நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன், வங்கி களிலிருந்து கடன் பெறுபவர் களைப் பற்றிய தகவல்களை சேக ரிக்கும் வகையில் புதிய கட்ட மைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறி யுள்ளார்.

இதன் மூலம் வங்கிகளில் கடன் பெறுபவர்களின் கணக்கு வழக்கு செயல்பாடுகளை வங்கிகள் தொடர்ந்து கண்காணிக்க முடியும். அதன்படி, ஒருவர் ஒரு வங்கியில் கடன் பெறுகிறார் என்றால், அவர் பற்றிய அனைத்து தகவல்களும் அந்தப் பொது தகவல் மையத்தில் பதிவு செய்யப்பட்டு விடும். இந்த தகவல்கள் மூலம் பிற வங்கிகளும் அந்நபருக்கு கடன் அளிப்பது தொடர்பான முடிவை எடுக்க முடியும். இதனால் நிதி மோசடியில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டறிய முடியும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT