வணிகம்

சோலார் பேனல் வழக்கு: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா மேல்முறையீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

கடந்த ஜூன் மாதம், சோலார் எனர்ஜி வர்த்த கம் தொடர்பான வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக உலக வர்த்தக அமைப்பு (டபிள் யூடிஓ) தீர்ப்பு அளித்து இருந்தது. தற்போது அந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இந்தியா, அமெரிக்காவுடன் சோலார் எனர்ஜி கட்டமைப்பு தொடர்பாக வர்த்தக உறவை மேற்கொண்டு வந்தது. இவ்விரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தத் தின்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் தயாரிப்புகளுக்கு அமெரிக்க அரசு தேவையான மானியங்கள் வழங்க வேண்டும். அதேபோல், வரி விகிதத்தை குறிப்பிட்ட அளவிலேயே மேற் கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்த விதிமுறையை அமெரிக்க அரசு முறையாக பின்பற்றவில்லை. பல்வேறு விதங்களில் இந்த ஒப்பந்தங்களை அமெரிக்க மாகாணங்கள் மீறியுள்ளன.

இது தொடர்பாக இந்திய அரசு கூறிய போது, வர்த்தகம், வரி தொடர்பான பொது ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு முறையாக பின்பற்றவில்லை. சோலார் எனர்ஜி தொடர்பான அவர்களது உள்நாட்டு தாயரிப்பு களுக்கே அதிக சலுகைகள் அளிக்கப் படுகின்றன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் தயாரிப்புகளுக்கு முறையான மானியங்களை அளிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டது. அந்தப் புகாரில் சோலார் எனர்ஜி தொடர்பான வர்த்தகத்தில் அமெரிக்காவின் குறிப்பிட்ட மாகாணங்கள் முறையான வர்த்தக உடன்படிக்கையை பின்பற்றவில்லை. வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான பொது ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

அமெரிக்கா மேல் முறையீடு

இந்தியாவின் புகாரை அடிப்படையாகக் கொண்டு உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) விசாரணையை தொடங்கியது. அதற்கென்று தனிக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. தீவிர விசாரணையை மேற்கொண்ட அந்தக் குழு அமெரிக்காவின் குறிப்பிட்ட மாகாணங்கள் இந்தியாவுடனான வர்த்தக உறவில் அதற்கான ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை உறுதி செய்தது. கடந்த ஜூன் மாதம் அந்தக் குழு தனது விசாரணை முடிவை அறிவித்தது. விசாரணை முடிவு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அரசு அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.

அமெரிக்காவுடனான இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து, இந்திய அரசும் 28 அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிகிதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT