வணிகம்

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு

செய்திப்பிரிவு

ஜம்மு

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் ஸ்ரீநகரில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்பு கள், தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் உள் ளிட்டவை இந்த மாநாட்டில் விவரிக்கப்படும் என்று தொழில் துறை முதன்மைச் செயலர் நவீன் சவுத்ரி தெரிவித்தார்.

இத்தகைய சர்வதேச மாநாடு நடத்தப்படுவதன் மூலம் இம் மாநிலம் தொடர்பாக தொழில் துறையினரிடம் நிலவி வரும் அச்சம் அகலும். சர்வதேச முதலீடு கள் வரும். தொழில்கள் தொடங்கப் படும்போது உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT