சென்னை
பிரான்சைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் பேட்டரி வாகனங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அத்து டன் ஒரு எஸ்யுவி மாடலை புதிதாக அறிமுகம் செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கட்ராம் மமிலாபலே தெரிவித்தார்.
புதிய அறிமுகங்கள் மூலம் நிறுவனத்தின் விற்பனை அளவை அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட் டிப்பாக உயர்த்தவும் திட்டமிட்டுள் ளதாக அவர் கூறினார்.
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தவிர எஸ்யுவி மாடலான கேப்டுர், லாட்ஜி ஆகிய வற்றுடன் டஸ்டர் மாடலும் இந்தி யாவில் மட்டுமின்றி சர்வதேச அள விலும் பிரலமான மாடலாக விளங்கு கின்றன. தற்போது நிறுவனம் புதி தாக டிரைபர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 4 மீட்டருக்குள் ளான எஸ்யுவி மாடலாகும்.
இதன் அறிமுகம் மற்றும் மேலும் இரண்டு வாகன அறிமுகம் மூலம் 5 சதவீத சந்தையப் பிடிக்க திட்ட மிட்டுள்ளதாக அவர் குறிப்பிட் டார். தற்போது நிறுவனத்தின் சந்தை அளவு 2.5 சதவீதமாக உள்ளது.
பேட்டரி கார்களைப் பொருத்த மட்டில் இன்ஜின் உள்ளிட்டவை இறக்குமதி செய்துதான் தயா ரிக்கப் போவதாக அவர் சொன் னார். டிரைபர் மாடல் இம்மாதம் 28-ம் தேதி அறிமுகமாகிறது. இதற் கான முன்பதிவு 17-ம் தேதி தொடங்குகிறது என்றார். முன் பதிவு செய்வோர் ரூ. 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார். க்விட் மாடலைப் போலவே அதிக அளவிலான உள்ளூர் பாகங் களை (93%) பயன்படுத்தியுள்ளது. இதுவும் மிகப் பெரும் வரவேற்பைப் பெறும் என நம்புவதாக அவர் கூறினார்.
2019-ம் ஆண்டில் இந்நிறுவனம் 86 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சம் வாகனங்களை விற் பனை செய்ய இலக்கு நிர்ணயித் துள்ளதாகவும், புதிய வரவான டிரைவர் அதற்கு துணை புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.