வணிகம்

ஐஓசி ரூ.492 கோடி முதலீடு

செய்திப்பிரிவு

அகமதாபாத்

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டில் ரூ. 492 கோடி முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளது. அம்மாநிலத்தில் விற்பனையகங்களை விரிவு படுத்த இந்த தொகை செலவிடப் பட உள்ளதாக நிறுவனம் தெரிவித் துள்ளது.

இது தவிர காண்ட்லா துறைமுகத்தில் உள்ள எல்பிஜி முனையத்தின் கொள்ளளவை அதிகரிக்க இந்த முதலீட்டில் பெரு மளவு தொகை செலவிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இங்குள்ள முனையத்தின் கொள்ளளவு 60 ஆயிரம் டன்னாக உள்ளது. இதை 2.5 லட்சம் டன்னாக அதிகரிக்க நிறு வனம் திட்டமிட்டுள்ளது. எல்பிஜிக் கான தேவை அதிகரித்து வரு வதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர எத்தனாலை சேமிக்க தனி கிடங்கு வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது குஜராத் மாநிலத்தில் 1,350 விநியோக மையங்கள் உள்ளன. மேலும் கூடுதலாக 200 விற்பனை மையங்களை ஏற் படுத்தவும் ஐஓசி முடிவு செய் துள்ளது

SCROLL FOR NEXT