டாடா குழுமத்தின் நிதிச் சேவை நிறுவனமான டாடா கேபிடல், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் மூலம் பொருட்களை விற்பனை செய்துவரும் ஆன்லைன் விற்பனையாளர் களுக்கு கடனுதவி அளிக்க உள்ளது.
வங்கியல்லாத நிதிச் சேவை நிறுவனமான டாடா கேபிடல் ஸ்நாப்டீல் விற்பனையாளர் களுக்கு நிபந்தனையற்ற கடனாக ரூ.5 லட்சம் முதல் ரூ.2 கோடிவரை வழங்க உள்ளது. தொழிலுக்குத் தேவையான நடைமுறை மூலதனம் தேவைப்படும் விற்பனையாளர்களுக்கு ஒப்பீட்ட ளவில் சிறந்த வட்டி விகிதத்துடன் இந்த கடன் வழங்க உள்ளதாக டாடா கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க சந்தையை ஸ்நாப் டீல் வைத்துள்ளது. பல்வேறு வகைகளில் 1,50,000 த்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் ஸ்நாப்டீல் மூலம் விற்பனை யாகிறது.